ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (SLC) வருடாந்த பொதுக்கூட்டம் இன்று காலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தல்கள் குழு 2023-2025 காலக் கட்டத்திற்கான SLC அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனிடையே நம்பகத் தகுந்த வட்டாரங்களின் தகவலின் அடிப்படையில், தற்போதைய தலைவர் மற்றும் SLC நிர்வாகக் குழுவின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 62 ஆவது பொதுக் கூட்டம் இதுவாகும்.
வருடாந்த பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தவும் உள்ளது.