சுற்றுலா விடுமுறைக்காக அடுத்த வாரம் இலங்கை வரும் ஜோன்டி ரோட்ஸ்

5 months ago
Cricket
(261 views)
aivarree.com

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோன்டி ரோட்ஸ் சுற்றுலா விடுமுறைக்காக அடுத்த வாரம் குடும்பத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

தென்னாபிரிக்க தொழில்முறை கிரிக்கெட் பயிற்சியாளர் தென்னிலங்கையில் உள்ள ஹிரிகெட்டியாவுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, தனது மகள் அஹங்கமா கடற்கரையில் சர்ஃபிங் செய்யும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாகவே ஜோன்டி ரோட்ஸ் இலங்கை வருகையினை உறுதிபடுத்தியுள்ளார்.