2024 ஐ.பி.எல். தொடரில் புதிய பந்துவீச்சு விதிமுறை

6 months ago
Cricket
(161 views)
aivarree.com

IPL2024 தொடரில் புதிய பந்துவீச்சு விதிமுறை ஒன்றை ஐ.பி.எல். நிர்வாகம் அமுலாக்கவுள்ளது.

அதன்படி ஒரு ஓவரில் இரண்டு பவுன்ஸர் பந்துகளை வீசுவதற்கு பந்துவீச்சாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

பந்துவீச்சாளர்களுக்கும் துடுப்பாட்ட வீரர்களுக்கும் இடையிலான போட்டித் தன்மையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளுர் 20க்கு20 தொடரான சாயிட் முஸ்டாக் அலி கிண்ணத் தொடரின் போது பரீட்சிக்கப்பட்டது.

அதேபோல இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் . தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பெக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அந்த முறைமையின்படி நாணய சுழற்சியின் போது ஒரு அணி பட்டியல் இடுகின்ற 4 மேலதிக வீரர்களில் ஒருவரை விளையாடும் 11 அணிக்குள் ஒருவருக்கு பதிலாக தேவையான போது உள்வாங்கிக் கொள்ள முடியும்.