IPL 2023 | முதல் போட்டியில் சென்னை தோல்வி

6 months ago
Cricket
(339 views)
aivarree.com

கோலாகலமாக ஆரம்பமான 2023ஆம் ஆண்டின் IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. 

போட்டியில் சென்னை முதலில் துடுப்பாடி 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

துடுப்பாட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் அடங்களாக 92 ஓட்டங்களைப் பெற்றார். 

வெற்றிபெற 179 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் குஜராத் துடுப்பாட ஆரம்பித்தது. 

சுப்பன் கில் 36 பந்துகளில் 63 ஓட்டங்களைப் பெற்று சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். 

இறுதியாக ஒரு ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் குஜராத் இருந்தது. 

இதன்போது தேஸ்பண்டே முதல் பந்தை அகலப்பந்தாக வீசினார்.

அடுத்த இரண்டு பந்துகளுக்கும் முகம் கொடுத்த தெவேசியா ஒரு சிக்ஸர் மற்று ஒரு பவுண்டரி அடித்து குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 

தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை தோல்வி அடைந்தது.