41 பந்துகளில் சதம் – ஆசிப் கான் சாதனை

1 year ago
Cricket
(410 views)
aivarree.com

நேபாளத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் ஆசிப் கான், அதிவேகமாகச் சதத்தைப் பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனையைப் புரிந்தார்.

நேபாளத்துக்கு எதிராகச் சற்று முன்னர் கிர்திபூரில் நடந்த போட்டியின்போதே அவர் 41 பந்துகளில் சதம் பெற்றுள்ளார்.

38 ஆவது ஓவரில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆசிப் கான் 11 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கலாக சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 310 ஓட்டங்களைக் குவித்தது.

தற்சமயம் ஆண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாகச் சதம் பெற்றவர்களுக்கான தரவரிசையில் ஆசிப் கான், ஏபி டி வில்லியர்ஸ், கோரி ஆண்டர்சன் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.