2023 ஐசிசி ஆண்கள் உலக கிண்ண தகுதிச்சுற்று போட்டி அட்டவணை வெளியீடு

1 week ago
Cricket
(91 views)
aivarree.com

2023 ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் 2023 ஐசிசி ஆண்களுக்கான ஒருநாள் உலகக் கிண்ணம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இறுதி இரண்டு இடங்களை தேர்வு செய்வதற்கு தகுதிகான் போட்டிகள் வழி வகுக்கும்.

அதனால் தகுதிச் சுற்றில் ஒவ்வொரு போட்டிகளும் மிக முக்கியமானதாக அமையும்.

தகுதிச் சுற்றில் பங்கேற்கும் 10 அணிகள் ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

போட்டியை நடத்தும் சிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள், நெதர்லாந்து, நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் A குழுவிலும், இலங்கை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை B குழுவில் உள்ளன.

Groups for the Cricket World Cup Qualifier 2023

ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் ஒரு முறை விளையாடும், ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணி, சூப்பர் சிக்ஸ் நிலைக்கு முன்னேறும். சூப்பர் சிக்ஸில், அவர்கள் குழு கட்டத்தில் சந்திக்காத அணிகளுடன் விளையாடுவார்கள்.

சூப்பர் சிக்ஸ் கட்டத்திற்குச் செல்லத் தவறிய அணிகளுக்கு எதிராகப் பெறப்பட்ட புள்ளிகளைத் தவிர, குழு கட்டத்தில் பெறப்படும் அனைத்து புள்ளிகளும் சூப்பர் சிக்ஸ் நிலைக்கு கொண்டு செல்லப்படும். இறுதிப் போட்டியாளர்கள் இருவரும் 2023 ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கு முன்னேறுவார்கள்.

முதல் முறையாக ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறும் நோக்கத்தில் இருக்கும் நேபாளத்திற்கு எதிராக தொடக்க ஆட்டத்தில் சிம்பாப்வே விளையாடும்.

இரண்டு முறை ஒருநாள் உலகக் கிண்ண சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் ஜூன் 18 ஆம் திகதி அண்டை நாடான அமெரிக்காவுக்கு எதிராக தகாஷிங்கா கிரிக்கெட் கிளப்பில் விளையாடும்.

ஜூன் 19 குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 1996 உலகக் கிண்ண சாம்பியனான இலங்கை எதிர்கொள்கிறது, அதே சமயம் ஜூன் 23 அயர்லாந்தின் புலவாயோ அத்லெடிக் கிளப்பில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஓமானை இலங்கை எதிர்கொள்கிறது.

ஜூன் 20 அன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நெதர்லாந்து சிம்பாப்வேக்கு எதிராக தனது தகுதிகான் ஆட்டத்தை தொடங்கும்.

அதே நேரத்தில் ஸ்கொட்லாந்து போட்டியாளர்களான அயர்லாந்தை புலவாயோவில் ஜூன் 21 அன்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் எதிர்கொள்ளும்.

சூப்பர் சிக்ஸ் சுற்று ஜூன் 29 அன்று தொடங்கும், அதே நேரத்தில் ஒவ்வொரு குழுவிலிருந்தும் கீழே உள்ள இரண்டு அணிகள் பிளேஆப்பில் போட்டியிடும்.

இந்த போட்டியில் முதல் முறையாக சூப்பர் சிக்ஸ் முதல் அனைத்து போட்டிகளுக்கும் டிஆர்எஸ் பயன்படுத்தப்படும்.