2023 எல்.பி.எல். ஏலம் ஜூன் 14 அன்று!

4 months ago
Cricket
(118 views)
aivarree.com

2023 லங்கா பிரீமியர் லீக்கின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எல்.பி.எல். ஏலம் கொழும்பில் அமைந்துள்ள ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

சர்வதேச வீரர்களின் பங்கு பற்றலுடன் இலங்கையின் முதன்மையான உள்நாட்டு டி:20 லீக் போட்டியான இந்த போட்டி வீரர்கள் ஏலம் நடத்துவது இதுவே முதல் முறை.

ஒவ்வொரு உரிமையுடைய அணியும் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஏலத்திற்கு 500,000 அமெரிக்க டொலர் தொகையைக் கொண்டு வரும், இதன் மூலம் மொத்தமாக ஐந்து அணிகளில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

லீக்கின் 4 ஆவது சீசன் 2023 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெறும்.