ஷேன் வோர்னை கௌரப்படுத்த ‘பொக்ஸிங் டே’ போட்டி

1 year ago
Cricket
(544 views)
aivarree.com

மறைந்த புகழ்பெற்ற கிரிக்கட் வீரர் ஷேன் வோர்னை கௌரவிக்கும் வகையில், ‘பொக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி அமையவுள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள், மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்தில் விளையாடவுள்ளன.

கடந்த மார்ச் மாதம் மர்மமான முறையில் ஷேன் வோர்ன் காலமான நிலையில், அதன் பின்னர் மெல்பேர்னில் நடைபெறுகின்ற முதலாவது டெஸ்ட் போட்டி இதுவாகும்.

இந்த மைதானத்திலேயே ஷேன் வோன் 1994ம் ஆண்டு ஆசஸ் தொடரில் தமது ஹெட்ரிக்கை பெற்றார்.

அதனை அடுத்து 12 வருடங்களின் பின்னர் தாமது 700வது டெஸ்ட் விக்கட்டையும் இங்கு கைப்பற்றியதுடன், அவரது 350வது போட்டியும் இந்த மைதானத்திலேயே இடம்பெற்றது.

இந்த நிலையில் எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அவருக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது ‘ஹைலைட்டாக’ கருதப்படுகின்ற வட்ட வடிவான தொப்பியையும், முகத்துக்கு அவர் பூசிக் கொள்ளும் வெள்ளைநிற ‘சின்க் க்ரீமையயும்’ அணிந்து கொள்ளுமாறு இரசிகர்களிடம் அவுஸ்திரேலிய கிரிக்கட் கோரியுள்ளது.