டேவிட் பெக்கமின் அணியில் இணையவுள்ள மெஸ்ஸி | வரலாற்று சாதனைக்கு சாத்தியம்

1 year ago
Local Sports
(993 views)
aivarree.com

மேஜர் லீக் சொக்கர் (MLS) அணியான இண்டர் மியாமியில் சேர்வதற்கு லியோனல் மெஸ்ஸி இணங்கியுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அர்ஜெண்டினாவின் முன்கள வீரரான மெஸ்ஸி தற்போது ஃப்ரான்ஸின் “பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனுக்காக” 3 வருட ஒப்பந்தத்தின் கீழ் விளையாடி வருகிறார்.

இந்த ஒப்பந்தம் 2022-23 பருவகாலத்துடன் காலாவதியாகிறது.  

மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு மீண்டும் திரும்பவிருப்பதாக தகவல் வெளியாகி இருந்தாலும், 35 வயதான அவர், முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்காமிற்கு சொந்தமான இன்டர் மியாமியில் சேருவார் என்று கூறப்படுகிறது.

FIFA உலகக் கொண்ணத் தொடர் முடிந்த பிறகு கட்டாரிலுள்ள MLS தரப்புடன் மெஸ்ஸி ஒப்பந்தம் செய்வார் என்று ஊடக தகவல்கள் கூறுகின்றன. 

இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானால், காற்பந்து லீக் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மெஸ்ஸி வரலாற்றில் பதிவாவார் என கூறப்படுகிறது. 

சனிக்கிழமையன்று மெக்சிகோவை அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.  

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனுக்காக, மெஸ்ஸி இந்த பருவகாலத்தில் 19 போட்டிகளில் 12 கோல்களை பெற்றுள்ளதுடன்,  14 கோல் உதவிகளை புரிந்துள்ளார்.