க்றிஸ்டியானோ ரொனால்டோவின் சர்ச்சைக்குரிய கோல் | அடிடாஸ் விளக்கம்

1 year ago
Football
(988 views)
aivarree.com

உருகுவே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் போர்ச்சுகல் போட்ட முதலாவது கோல், க்றிஸ்டியானோ ரொனால்டோவினாலா? அல்லது ப்ரூனோ ஃபெர்னாண்டிசாலா? போடப்பட்டது என்ற சர்ச்சை நிலவியது.

போட்டியின் 54ஆவது நிமிடத்தில் இந்த கோல் போடப்பட்ட போது ரொனால்டோ பந்தை தலையால் முட்ட பாய்ந்த அதேநேரம், பந்துக்கு குறுக்காக ப்ரூனோ ஃபெர்னாண்டிஸ் செல்வார்.

மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த ஸ்கோர் பலகையில் கோலை ரொனால்டோவே போட்டார் என பதிவாகி இருந்தாலும், அந்த கோல் ப்ரூனோவுக்கு வழங்கப்பட்டது.

போட்டியில் பயன்படுத்தப்பட்ட அல் ரிஹ்லா பந்துக்குள் பொருத்தப்பட்டுள்ள சென்சார் மூலம், அந்த கோல் போடப்பட்ட போது ரொனால்டோவினால் எந்தத் தொடுகையும் இடம்பெற்றிருக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் அறிவித்துள்ளது.

இந்த கோல் ரொனால்டோவுக்கு சென்றிருந்தால், போர்ச்சுகல் அணிக்காக அதிக கோல்களை போட்டவர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பார்.

அத்துடன் உலக கிண்ணப் போட்டிகளில் அதிக கோல் போட்டவர்கள் வரிசையில் லியோனால் மெசியை முந்தி சென்றிருப்பார்.