ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மீண்டும் தலைவரானார் ரஷித்  

1 year ago
Cricket
(256 views)
aivarree.com

2022 டி20 உலகக் கிண்ணத் தோல்வியைத் தொடர்ந்து அணித் தலைவர் பதவியில் இருந்து மொஹமட் நபி விலகினார். 

தற்போது நபிக்கு பதிலாக ரஷித் கான் டி20 ஆப்கானிஸ்தான் அணித் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ரஷீத் இந்த பதவிக்கு புதியவர் அல்ல.

இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து வடிவ கிரிக்கட் போட்டிகளுக்கும் அவர் தலைவராக இருந்தார்.  

உலகெங்கிலும் உள்ள பல்வேறு டி20 லீக்குகளில் விளையாடிய ரஷித்தின் அனுபவம், அணியை புதிய நிலைக்கு கொண்டு செல்ல உதவும் என்று ஆப்கான் கிரிக்கட் சபைத் தலைவர் மிர்வைஸ் அஷ்ரஃப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 

அடுத்த ஆண்டு ஃபெப்ரவரியில் UAEக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  ஆப்கானிஸ்தான் மூன்று T20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

இதுவே ரஷித்தின் முதல் தொடராக அமையவுள்ளது. 

இந்த நியமனம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கருத்து தெரிவித்த ரஷீத் , “அணித் தலைவராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், நாட்டை முன்னின்று வழிநடத்திய அனுபவம் எனக்கு உள்ளது” என்றும்

கூறினார். 

24 வயதான ரஷீத் இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானை T20I களில் வழிநடத்தியுள்ளார்.

2019 செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்களுக்கு இடையில் மூன்று மாதங்களில் அவர் தலைமைத்தாங்கிய ஏழு போட்டிகளில் நான்கு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக, ஆப்கானிஸ்தான் அவரது தலைமையில் 16 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.