அடுத்த தொடர்களுக்கான இந்திய கிரிக்கட் அணி விபரம் அறிவிப்பு

1 year ago
Cricket
(214 views)
aivarree.com

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு தொடர்களுக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போர்டர்-கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற மாட்டார். 

12 ஆண்டுகளுக்கும் முன்னர் பங்களாதேசத்தில் தனது முதல் டெஸ்டில் விளையாடிய ஜெய்தேவ் உனட்கட் இந்திய குழாமில் இடம்பிடித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (தலைவர்), கே.எல்.ராகுல் (துணை தலைவர்), ஷுப்மன் கில், சேட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (வி.கா), இஷான் கிஷான் (வி.கா), ஆர்.  அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, மொஹமட்  ஷமி, மொஹமட் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி: 

ரோஹித் சர்மா (தலைவர்), ஷுப்மான் கில், இஷான் கிஷான் (Wk), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், KS பாரத் (Wk), ஹர்டிக் பாண்டியா (துணை தலைவர்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அஹமட்  , ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், மொஹமட்  ஷமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி: 

ஹர்திக் பாண்டியா (தலைவர்), சூர்யகுமார் யாதவ் (துணை தலைவர்), இஷான் கிஷான் (Wk), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (wk), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்.  , யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், சிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார்.

 குறிப்பு: KL ராகுல் & அக்சர் படேல் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார்கள்.