விஸ்டன் ஐ.பி.எல். அணியில் பத்திரனவும்

1 year ago
Cricket
(364 views)
aivarree.com

2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சம்பியனான குஜராட் டைட்டன்ஸை வீழ்த்தி ஐந்தாவது முறையாகவும் ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் இத் தொடரை அடிப்படையாக கொண்டு கிரிக்கெட் உலகில் மிகப் பிரபல்யமாக காணப்படும் விஸ்டன் சஞ்சிகையானது 11 பேர் கொண்ட 2023 ஐ.பி.எல். அணியை அறிவித்துள்ளது.

இந்த 11 பேர் கொண்ட ஐ.பி.எல். அணியில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்குவதுடன், இலங்கையின் மதீஷ பத்திரனவும் உள்ளடங்குவது விசேட அம்சமாகும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய பத்திரன சீசனில் 14.63 என்ற சராசரியுடன் மொத்தமாக 19 விக்கெட்டுகளை வீத்தியுள்ளார்.

பத்திரன, சென்னை சூப்பர் கிங்ஸ் கண்டறிந்த மிகவும் பெறுமதியான வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

அவரது யோர்க்கர்களும் மாறுபாட்ட பந்து வீச்சு திறனும் அவரை உரிமையாளருக்கும் இலங்கைக்கும் ஒரு சொத்தாக மாற்றும் என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறியுள்ளனர்.

விஸ்டனின் 2023 ஐ.பி.எல். அணி

 1. ஃபாஃப் டு பிளெசிஸ் (ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
 2. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ரோயல்ஸ்)
 3. சுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்)
 4. சூர்யகுமார் யாதவ் (மும்பை இந்தியன்ஸ்)
 5. ஹென்ரிச் கிளாசென் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
 6. ரிங்கு சிங் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
 7. ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்)
 8. ரஷித் கான் (குஜராத் டைட்டன்ஸ்)
 9. மொஹமட் ஷமி (குஜராத் டைட்டன்ஸ்)
 10. மோகித் சர்மா (குஜராத் டைட்டன்ஸ்)
 11. மதீஷா பத்திரன (சென்னை சூப்பர் கிங்ஸ்)