வில்லியம்சனின் மற்றொரு சாதனை

1 year ago
Cricket
(354 views)
aivarree.com

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து சார்பில் 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையினை கேன் வில்லியம்சன் இன்று தனதாக்கினார்.

வெலிங்டனில் இன்று இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கேன் வில்லியம்சன், மொத்தமாக 296 பந்து வீச்சுகளை எதிர்கொண்டு 23 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 215 ஓட்டங்களை குவித்தார்.

கடந்த மாதம் வெலிங்டனில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது கேன் வில்லியம்சன், அணியின் சக வீரரான ரோஸ் டெய்லரின் 7,683 ஓட்டங்களை கடந்து நியூசிலாந்துக்காக டெஸ்டில் அதிக ஓட்டங்களை எடுத்தவர் ஆனார்.

இந் நிலையிலேயே அவர் இன்று 8 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் தலைவரின் இந்த இரட்டை சதம், அவரது டெஸ்ட் வாழக்கையில் பெற்ற ஆறாவது சதமாகும்.