வரலாற்றுப் பதிவுடன் தோற்றது கட்டார் 

3 months ago
Local Sports
(1249 views)
aivarree.com

உலகக்கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டியில் கட்டார் மற்றும் ஈக்குவடோர் அணிகள் மோதின. 

இதில் ஈக்குவடோர் அணி 2க்கு 0 என்ற கோல் வித்தியாசத்தில் கட்டாரை வீழ்த்தியது. 

ஈக்வடோர் அணியின் தலைவர் என்னர் வெலன்சியா 2 கோல்களையும் பெற்றதுடன், உலகக்கிண்ணத் தொடர் ஒன்றின் முதல் போட்டியிலேயே 2 கோல்களை போட்ட 5வது வீரராகவும் பெயர் பெற்றார். 

அதேநேரம், இந்த தோல்வியுடன், உலகக்கிண்ணத் தொடரை நடத்தி முதல் போட்டியிலேயே தோல்வியுற்ற முதலாவது நாடாக கட்டார் பதிவானது.