ரஃபாயல் நடேலின் அறிவிப்பு

1 year ago
Tennis
(804 views)
aivarree.com

காயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீரர் ரஃபாயல் நடேல், நீண்டகாலமாக ஓய்விலுள்ளார்.

அவர் இம்முறை மொண்டிகார்லோ டென்னிஸ் தொடரில் மீண்டும் தமது டென்னீஸ் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

எனினும் அவர் அதனை முற்றாக மறுத்துள்ளார்.

தான் இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையவில்லை எனவும், எப்போது மீண்டும் விளையாட ஆரம்பிப்பேன் என்பதை உறுதியாக சொல்ல முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.