முதல் இன்னிங்ஸில் இலங்கை தடுமாற்றம்

12 months ago
Cricket
(291 views)
aivarree.com

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்றுள்ளது.

வெலிங்டனில் நேற்று ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 123 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

நியூஸிலாந்து சார்பில் அதிகபடியாக கேன் வில்லியம்சன் 215 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 200 ஓட்டங்களையும், கான்வே 78 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை சார்பில் கசூன் ராஜித 2 விக்கெட்டுகளையும், தனஞ்சய டிசில்வா மற்றும் பிரபாத் ஜெயசூரிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்றது.

ஓசத பெர்னாண்டோ 6 ஓட்டங்களுடனும், குசல் மெண்டீஸ் டக்கவுட்டுடனும் ஆட்டமிழக்க, அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 16 ஓட்டங்களுடனும், பிரபாத் ஜெயசூரிய 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

போட்டியின் மூன்றாம் நாள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் பலோ – ஒன்னை தவிர்க்க இலங்கைக்கு இன்னும் 554 ஓட்டங்கள் தேவை என்ற நிலை உள்ளது