முதல்முறையாக தோற்றது மும்பை இந்தியன்ஸ்

3 days ago
Cricket
(44 views)
aivarree.com

பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் இன்று தமது முதல் தோல்வியை பெற்றது. 

யூபி வோரியர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் மும்பை முதலில் துடுப்பாடி 20 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. 

ஹெய்லி மெத்தீய்ஸ் மற்றும் இசி வொங் ஆகியோர் 35 மற்றும் 32 ஓட்டங்களைப் பெற்றனர். 

சோஃபி எக்லஸ்டன் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

பதிலளித்தாடிய யூபி வோரியர்ஸ், 19.3 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து வெற்றிபெற்றது. 

தஹிலா மெக்ரா 38 ஓட்டங்களையும், க்ரேஷ் ஹாரிஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர்.