மீண்டும் முதலிடம் பிடித்த ஜொக்கோவிச்

1 year ago
Tennis
(542 views)
aivarree.com

அவுஸ்திரேலிய ஓபனில் தனது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதன் மூலம் திங்களன்று வெளியிடப்பட்ட ATP தரவரிசையில் நொவெக் ஜொக்கோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்தார்.

35 வயதான செர்பிய நாட்டவரான அவர், நான்கு இடங்கள் முன்னேறி ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை பின் தள்ளினார்.

கார்லோஸ் காயத்தால் தொடரை தவறவிட்ட நிலையில் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

ஜொக்கோவிச், 10வது அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஜூலை 2011 முதல் 374வது வாரமாக ஜொக்கோவிச் டென்னிஸ் தரவரிசையில் உலகின் முதல் இடத்தில் உள்ளார்.