மனமுடைந்துவிட்டேன் – நடால் வருத்தம்

11 months ago
Tennis
(379 views)
aivarree.com

இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவதியுறும் டென்னிஸ் வீரர் ரஃபாயல் நடால், அவுஸ்திரேலிய ஓபனில் புதன்கிழமை இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதனால் தாம் மனமுடைந்துவிட்டதாக ரஃபாயல் நடால் தெரிவித்துள்ளார்.

36 வயதான நடப்பு சாம்பியன் நடால், காயத்தினால் ஏற்பட்ட தோல்வி ஏமாற்றமாக இருந்தபோதிலும், தொடர்ந்து டென்னிஸ் விளையாட்டில் கவனம் செலுத்தமுடியுமென நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வீரர் மெக்கென்சி மெக்டொனால்டுக்கு எதிரான இரண்டாவது செட்டில் விளையாடும் போது ஸ்பானிய வீரர் நடாலுக்கு இடுப்பு முறிவு ஏற்பட்டது.

அதனை அடுத்து அவர் 6-4, 6-4, 7-5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

2016 க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர் ஒன்றில் அவர் ஆரம்ப சுற்றிலேயே வெளியேறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.