தலை சிறந்த கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான ஜிம் பிரவுன் காலமானார்

11 months ago
Football
(400 views)
aivarree.com

ஹொலிவுட் அதிரடி நாயகனாகவும், சிவில் உரிமை ஆர்வலராகவும் மாறிய அமெரிக்கக் கால்பந்து வீரர் ஜிம் பிரவுன் தனது 87 ஆவது வயதில் காலமானார்.

வியாழன் (19) இரவு அவர் லொஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள அவரது வீட்டில் ஜிம் பிரவுன் காலமானதாக அவரது மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜோர்ஜியாவில் பிறந்த பிரவுன் 1964 இல் கிளீவ்லேண்ட் பிரவுன்ஸ் அணியை, தேசிய கால்பந்து லீக் பட்டத்திற்கு அழைத்துச் சென்றார் மற்றும் மூன்று முறை NFL இன் மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் மற்றும் ஸ்போர்ட்டிங் நியூஸ் மூலம் 20 ஆம் நூற்றாண்டின் சிறந்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் என்று இரண்டு முறை அவர் பெயரிடப்பட்டார்.

1966 ஆம் ஆண்டில், அவர் 30 வயதில் தனது கால்பந்து வாழ்க்கையின் உச்சத்தில் ஓய்வு பெற்று விளையாட்டு உலகைத் திகைக்க வைத்தார்.