தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற SLC அதிகாரிகள்

1 year ago
Cricket
(279 views)
aivarree.com

இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அவரது அலுவலகப் பணியாளர்கள் குழுவினர் புதிய பதவிக்காலத்திற்கான தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலின் போது, ​​2023-2025 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மூன்றாவது முறையாகவும் அவர் பதவியேற்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட மீதமுள்ள நிர்வாகிகள் விபரம் வருமாறு:

  • ஜயந்த தர்மதாச – உப தலைவர்
  • ரவின் விக்கிரமரத்ன – உப தலைவர்
  • மொஹான் டி சில்வா – செயலாளர்
  • சுஜீவ கொடலியத்த – பொருளாளர்
  • கிரிஷாந்த கபுவத்த – உதவிச் செயலாளர்
வேட்புமனு திரும்பப்பெறப்பட்டதால் உதவி பொருளாளர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. எனினும் SLC அரசியலமைப்பின் 7 (I) இன் படி, உரிய நேரத்தில் குறித்த நியமனம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.