மென்செஸ்டர் யுனைடட் கழகத்தின் காற்பந்து வீரர் ப்ருனோ பெர்ணாண்டிஸ், தமது தீவிர இரசிகர் ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
குறித்த இரசிகர், ப்ரூனோவுக்கு தொடர்ந்து 300 நாட்கள் தகவல் அனுப்பி வந்துள்ளார்.
280ம் நாள் தகவல் அனுப்பும் போது, 300 நாட்களை கடந்தால் அவருக்கு டீஷேர்ட் ஒன்றை அன்பளிப்பாக வழங்குவதாக ப்ரூனோ உறுதியளித்திருந்தார்.
300ஆவது நாள் கடந்தப்பின்னர் இன்ப அதிர்ச்சியாக அவரது இரசிகருக்கு வீடியோ கோல் எடுத்த ப்ரூனோ, அவரது கையெழுத்துடன், மென்செஸ்டர் யுனைடட் டீஷேர்ட் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.