சென்னை அணிக்கு பாரிய இழப்பு : முகேஷ் சவுத்ரி நீக்கம்

1 year ago
Cricket
(361 views)
aivarree.com

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி 2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் அவரின் வெற்றிடத்தை நிரப்ப சென்னை அணி மாற்று வீரரை தேடவுள்ளது.

2023 ஐ.பி.எல். போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் 24 மணிநேரங்கள் கூட இல்லாத நிலையில் இந்த அறிவிப்பானது சென்னை அணிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் அவர்களின் அதிகம் மதிப்பிடப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சவுத்ரி ஆவார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாககே முகேஷ் சவுத்ரி தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் தற்சமயம் அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) உள்ளார்.

நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை மோதவுள்ளது.