சிறிலங்கா கிரிக்கட் | புதிய தேர்வு குழு பரிந்துரை நிராகரிப்பு

1 year ago
Cricket
(223 views)
aivarree.com

சிறிலங்கா கிரிக்கட்டின் தேசிய அணித் தேர்வுக் குழுவுக்கான புதிய உறுப்பினர்களை பரிந்துரை செய்து, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய விளையாட்டுதுறை தெரிவுக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.

அதில், தற்போதைய தேர்வுக் குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தலைமையிலான முன்னாள் கிரிக்கட் வீரர்கள் சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

எனினும் இந்த பெயர்களை தேசிய விளையாட்டுத்துறை தெரிவுக்குழு நிராகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை கிரிக்கட்டுக்கு புத்துயிரளிக்க நிபுணத்துவமும் தகைமையும் கொண்ட கிரிக்கட் தேர்வாளர்கள் தேவை.

பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களை விட திறமையாளர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்று, தேசிய விளையாட்டுத்துறை தெரிவுக்குழு பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-நியூஸ்வயர்-