சவோனா சர்வதேச மெய்வல்லுநர் போட்டியில் யுபுன் அபேகோன் இரண்டாம் இடம்

6 days ago
Athletics
(32 views)
aivarree.com

இத்தாலியில் நடைபெற்று வரும் சவோனா சர்வதேச மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யுபுன் அபேகோன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் ஆரம்பச் சுற்றில் இலங்கை வீரர் 10.04 வினாடிகளில் இலக்கை எட்டி இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இதனால் அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

இப்போட்டியில் இங்கிலாந்தின் ரீஸ் பிரெஸ்கோட் 9.94 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.