சனத், அஃப்ரிடிக்கு அடுத்த இடத்தில் ஷகிப்

1 year ago
Cricket
(375 views)
aivarree.com

பங்களாதேஷ் சலகதுறை வீரர் ஷகிப் அல் ஹசான் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை கடந்த மூன்றாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்,

சில்ஹெட்டில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 24 ஓட்டங்களை பெற்றபோது அவர் இந்த சாதனையை புரிந்தார்.

தற்சமயம் சனத் ஜெயசூர்யா மற்றும் சஹிட் அஃப்ரிடிக்கு அடுத்த இடத்தில் குறித்த தரவரிசையில் ஷகிப் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அதேநேரம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பங்களாதேஷ் சார்பில் அதிகபடியான ஓட்டங்களை பெற்ற தமிம் இக்காலுக்கு (8,146) அடுத்த இடத்திலும் அவர் உள்ளார்.

இம் மாத தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான பங்களாதேஷின் முந்தைய ஒருநாள் போட்டியில், ஷகிப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி 300 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.