ஓய்வா? தோனி சொல்லும் பதில் (வீடியோ)

1 year ago
Cricket
(410 views)
aivarree.com

2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி பந்து வரைக்கும் போராடி வெற்றியை பதிவு செய்தது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் ஐந்தாவது ஐபிஎல் கிண்ணமாகும்.

இந்த தொடர் ஆரம்பித்தது முதலே இந்த தொடர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் கடைசி தொடராக இருக்கும் என்ற கருத்துக்கள் சொல்லப்பட்டு வந்தன.

இது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதும் அவர் இதுவரைக்கும் சரியான பதிலை வழங்கவில்லை.

அண்மையில் தோனி, இந்த தொடர் தான் தமது கடைசி தொடராக இருக்க கூடும் என்பது போன்ற ஒரு கருத்தினை கூறியிருந்தாலும், அது உறுதியான அறிவிப்பாக இருக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றைய தினம் இறுதிப் போட்டியின் பின்னர் அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய அவர் “நன்றி தெரிவித்து விட்டு ஓய்வு பெற்றுச் செல்வதுதான் இந்த தருணத்தில் இலகுவான விடயமாக இருக்கும். ஆனால் அடுத்த தொடர் வரைக்கும் தனது உடலை தயார்படுத்தி மீண்டும் விளையாடுவது தான் கடினமான செயலாக இருக்கும். அதுவே எனது ரசிகர்களுக்கு எனது பக்கத்திலிருந்து வழங்கக்கூடிய உயர்ந்த அன்பளிப்பாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

இதன் மூலம் அவர் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு எதிர்பார்த்து உள்ளார் என்பதை சூட்சுமமாக சொல்லி இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.