ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெற்ற இந்தியா

1 year ago
Cricket
(232 views)
aivarree.com

இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் அபார சதங்களின் மூலம் நியூசிலாந்திற்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதன்மூலம் இந்தியா, செவ்வாயன்று புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், ரோஹித் (101), கில் (112) ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களைக் குவித்து, போட்டியில் மொத்தமாக 9 விக்கட் இழப்புக்கு 385 ஓட்டங்களை எடுத்து, நியுசிலாந்து அணியை 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றனர்.

நியுசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவோன் கன்வேயின் 138 ஓட்டங்கள் வீணானது.

இலங்கைக்கு 3க்கு0 என்ற வெள்ளையடித்த இந்தியா தனது இரண்டாவது தொடர்ச்சியான தொடரின் பூரண வெற்றியை நியூசிலாந்துக்கு எதிராக பதிவு செய்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஒருநாள் தரவரிசையில் உலகக் கோப்பையை கைப்பற்றிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை பின்தள்ளி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

நியுசிலாந்து இரண்டாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.