ஒத்திவைக்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான 2023 இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
நேற்று மாலை அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் குறித்த போட்டியானது ஆரம்பமாகவிருந்தது.
எனினும் அஹமதாபாத்தில் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக ரிசர்வ் நாளான இன்று போட்டி ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்றைய ரிசர்வ் நாளில் அஹமதாபாத் வானிலை தரவுகளின்படி, மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அங்கு இல்லை என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனினும் காற்றின் வேகம் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இன்றைய இறுதிப்போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால், அது அவர்களின் ஐந்தாவது ஐபிஎல் பட்டமாகும்.
மறுபுறம், நடப்பு சம்பியனான குஜராத் வெற்றி பெற்றால், அது அவர்களில் இரண்டாவது ஐபிஎல் பட்டமாகும்.