இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு FIFA தடை 

1 year ago
Football
(211 views)
aivarree.com

இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தினால் (FIFA)  ஜனவரி 21, 2023 முதல் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது

ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்துத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளாலும், கால்பந்து நிர்வாக விதிகளை இலங்கை அதிகாரிகள் மீறியதாலும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  

இதன் விளைவாக, இந்த தடை நீக்கப்படும் வரை இலங்கை கால்பந்து சம்மேளன பிரதிநிதி மற்றும் கிளப் அணிகள் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உரிமை இல்லை.

அத்துடன் அவர்களுடன் சர்வதேச கால்பந்து அணிகளும் எந்தத் தொடர்பையும் பேணாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக அண்மையில் ஜெய் ஶ்ரீ ரங்கா தெரிவானமை குறிப்பிடத்தக்கது.