இமாலய ஓட்டங்களுடன் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்ட நியூசிலாந்து

1 year ago
Cricket
(341 views)
aivarree.com

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இடம் பெற்று வருகிறது.

இந்த போட்டியின் இரண்டாவது நாளான இன்று நியூசிலாந்து அணி தமது முதல் இன்னிங்க்ஸை நிறைவு செய்து கொண்டது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 580 ஓட்டங்களைப் பெற்றது.

நியூசிலாந்து சார்பாக இரண்டு பேர் இரட்டை சதங்களை பூர்த்தி செய்தனர்.

கேன் வில்லியம்சன் 215 ஓட்டங்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை சார்பாக கசுன் ராஜித்த 126 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை அணி முதலாம இன்னிங்ஸை ஆரம்பிக்கிறது.