அவுஸ்திரேலிய ஓபன் | மெட்வெடேவ் அடுத்தச் சுற்றுக்கு முன்னேற்றம்

1 year ago
Tennis
(417 views)
aivarree.com

அவுஸ்திரேலிய ஓபனில் இரண்டு முறை ரன்னர்-அப் ஆன டேனியல் மெட்வெடேவ், அமெரிக்க வீரர் மார்கோஸ் ஜிரோனை நேர் செட் கணக்கில் வீழ்த்தி இம்முறை இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

ரஷ்ய ஏழாம் நிலை வீரரான மெட்வெடேவ், ஜிரோனை 6-0 6-1 6-2 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

கடந்த வருடத்தின் இறுதிப் போட்டியில் ரஃபாயல் நடாலிடம் மெட்வடேவ் தோல்வியடைந்தார்.

எனினும் இம்முறை வெற்றிபெற முயற்சிப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மெட்வெடேவ் ஜிரோனுக்கு எதிராக மூன்று ஆட்டங்களில் மட்டுமே தோல்வியடைந்தார்.