புதிய அரசியலமைப்பினூடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வினை, ஒரு வருட காலத்திற்குள் நிறைவு செய்வேன் என்ற ஜனாதிபதியின் வாக்குறுதியை வரவேற்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், இந்த விடயத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை வழங்குவோம் எனவும் அவர் கூறியுள்ளார் யாழ்ப்பாணத்தில் இன்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ALL VIDEOS