பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பாதணி; உஸ்மான் கவாஜாவுக்கு எச்சரிக்கை

7 months ago
Cricket
(240 views)
aivarree.com

பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையிலான எந்த செயலினையும் மேற்கொள்ளக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளார்.

வியாழன் அன்று பேர்த்தில் பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆட்டத்தில கவாஜா, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் “எல்லா உயிர்களும் சமம், சுதந்திரம் ஒரு மனித உரிமை” என்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பாதணிகளை அணிய திட்டமிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், தனிப்பட்ட செய்திகளை தடை செய்யும் ஐசிசி விதிகளுக்கு கவாஜா கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

எனினும் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பேட் கம்மின்ஸ் மற்றும் அந் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோர் கவாஜாவுக்கு ஆதரவளித்துள்ளனர்.

இருந்த போதிலும் நாளைய ஆட்டத்தில் கவாஜா சர்ச்சைக்குரிய காலணியினை அணிய மாட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்லாமியரான உஸ்மன் கவாஜா இந்த வார தொடக்கத்தில் பேர்த்தில் குறித்த வசனங்கள் பொறிக்கப்பட்ட காலணிகளை அணிந்து பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

மேலும், காசாவில் உள்ள பொது மக்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் அவர் முன்னர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.