19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி இன்று சீனாவில் ஆரம்பம்

5 months ago
Athletics
(150 views)
aivarree.com

19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் இன்று ஆரம்பமாகிறது.

இந்த போட்டிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டியது.

எனினும் கொவிட்-19 தொற்று காரணமாக இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று தொடங்கும் போட்டியானது எதிர்வரும் ஒக்டோபர் 08 ஆம் திகதி வரை நடைபெறும்.

இம்முறை 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டிகள் அனைத்தும் ஹாங்சோ உள்ளிட்ட 5 பகுதிகளில் உள்ள 54 இடங்களில் நடத்தப்பட உள்ளது.

இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

மொத்தம் 481 தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

சுமார் 100 விளையாட்டு வீரர்கள் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளனர்.

மேலும் அவர்கள் 21 ஆட்டங்களில் போட்டியிடவுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும் பொறுப்பு தடகள வீராங்கனை கயந்திகா அபேரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.