2023 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்னவுக்கு பரிசுத் தொகையாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் 10 மில்லியன் ரூபா வழங்கவுள்ளது.
சீனாவின், ஹங்சோவில் 19 ஆவது ஆசிய விளையாட்டு நிகழ்வு நடைபெற்று வருகிறது.
19 வயதான வீராங்கனை ஓட்ட இலக்கினை 2.03.20 நிமிடங்களில் நிறைவு செய்து முதலிடம் பிடித்தார்.
2002 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிய விளையாட்டு தடகளப் போட்டிகளில் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் இது ஆகும்.
இந்நிலையிலேயே 21 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டிற்காக முதல் ஆசிய விளையாட்டு தடகள தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்த கருணாரத்னாவின் கடினமான, முயற்சிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் பாராட்டினை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தருஷி கருணாரத்னவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.