SLC இடைக்கால குழு தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 20

3 weeks ago
Cricket
(38 views)
aivarree.com

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நியமித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால குழுவுக்கு நவம்பர் 07 ஆம் திகதி அன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாள் தடை உத்தரவு பிறப்பித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய இருவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

பின்னர், இந்த தடை உத்தரவை நீக்குமாறு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.