விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக SLC அவதூறு வழக்கு

4 months ago
Cricket
(64 views)
aivarree.com

அவதூறான அறிக்கைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், உப தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக 2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சார்பில் அவர்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.