சச்சித்ர சேனாநாயக்கவுக்கு பிணை

3 months ago
Cricket
(109 views)
aivarree.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரம் சச்சித்ர சேனாநாயக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் (LPL) முதல் சீசனில் போட்டிகளை சரிசெய்வதற்காக துபாயிலிருந்து தொலைபேசி மூலம் சச்சித்ர சேனநாயக்க இரண்டு கிரிக்கெட் வீரர்களை அணுகியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையைத் தொடங்கிய பின்னர், முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு மூன்று மாத பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கடந்த செப்டெம்பர் 6 ஆம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.