இலங்கை ரக்பிக்கான ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை நியமித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் (25) திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
06 மாத காலத்திற்கு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் பேணுவதற்கான தற்காலிக செயற்பாடாக இக் குழு நியமிக்கப்பட்டது.