குலசேகரவை மீண்டும் கொண்டு வரும் நேரம் வந்துள்ளது – மலிங்க

7 months ago
Cricket
(206 views)
aivarree.com

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் நுவான் குலசேகரவை தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக சேர்க்கும் தருணம் வந்துள்ளதாக முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கிலேயே லசித் மலிங்க இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

உபுல் தரங்க தலைமையிலான புதிய இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த மலிங்கா, நுவான் குலசேகர மற்றும் பிரபாத் நிஷங்க போன்ற முன்னாள் வீரர்களை தேசிய மட்டத்திற்கு பயிற்சியாளர்களாக கொண்டு வருவதற்கான நேரம் வந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக அவர்களுடன் பயிற்சியாளராக பணியாற்றியதாகவும், அவர்களது திறமைகள், நிபுணத்துவத்தை அங்கு பார்த்ததாகவும் மலிங்க மேலும் அந்த பதிவில் சுட்டிக்காட்டினார்.