ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் இந்தியா – இலங்கை இன்று மோதல்

8 months ago
Cricket
(128 views)
aivarree.com

வரலாற்று சிறப்புமிக்க ஆசிய விளையாட்டு தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இன்று இந்தியா – இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதவுள்ளன.

இந்த ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் சீனாவின் ஹாங்சோ நகரில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

அதேநேரம், முதலாவதாக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று (25) காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில் இந்தியாவை இலங்கை சந்திக்கவுள்ளது.