FIFA தடைக்கு பின் முதல் சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடும் இலங்கை

5 months ago
Football
(146 views)
aivarree.com

சவுதி அரேபியாவின், அபாவில் இன்று (12) நடைபெறவுள்ள FIFA உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் இலங்கை தனது முதல் போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

அதன்படி, இலங்கை தனது முதல் ஆட்டத்தில் யேமனை எதிர்‍கொள்ளும்.

FIFA வின் காரணமாக சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இலங்கை தேசிய கால்பந்து அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.

FIFA உலக தரவரிசையில் யேமன் 156 ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை 202 ஆவது இடத்தில் உள்ளது.

சர்வதேச கால்பந்து அரங்கில் இலங்கை – யேமன் அணிகள் மோதுவது இதுவே முதன் முறையாகும்.