அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ள தனுஷ்க

7 months ago
Cricket
(437 views)
aivarree.com

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

குறித்த வழக்கில் அவர் நிரபராதி என சிட்டினி நீதிமன்றம் கடந்த வாரம் அறிவித்தது.

இதனையடுத்து தனுஷ்க குணதிலக்க 11 மாதங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.

நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தனுஷ்க குணதிலக்க ஊடகவியலாளர்களிடம் உரையாற்றுகையில்,

  • ஆசிய கிண்ணத்தில் விளையாடாது போனது வருத்தம் அளிக்கிறது.
    • மீண்டும் கிரிக்கெட் விளையாட தேவையான பயிற்சியில் விரைவில் ஈடுபடுவேன்.
    • அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்.
    • இதன் மூலம் இழப்பீட்டு தொகையினை கோர எதிர்பார்த்துள்ளேன் – என்றார்.