வெற்றியுடன் திரும்பி வர முயற்சிப்போம் – பாபர் அசாம்

10 months ago
Cricket
(299 views)
aivarree.com

அணியின் மன உறுதி அதிகமாக உள்ளது, நாங்கள் வெற்றியுடன் திரும்பி வர முயற்சிப்போம் என பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் தெரிவித்தார்.

2023 ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன்னதாக கடாபி மைதானத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே பாபர் அசாம் இதனைக் கூறியுள்ளார்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 • அங்கு இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
 • நாங்கள் இன்றிரவு உலகக் கிண்ணத்துக்காக புறப்படுகிறோம்.
  • அணியின் மன உறுதி அதிகமாக உள்ளது மற்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
  • நாங்கள் வெற்றியுடன் திரும்பி வர முயற்சிப்போம்.
  • நீங்கள் அனைவரும் எங்களை ஆதரித்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
 • உலகக் கிண்ணத்துக்காக இந்தியாவுக்கு பயணிப்பதில் நாங்கள் அனைவரும் பெருமைப்படுகிறோம்.
  • நாங்கள் (தற்போதைய அணியினர்) இதுவரை இந்தியாவில் விளையாடவில்லை. எனினும் அது குறித்து நாங்கள் அழுத்தம் அடையவில்லை.
  • இந்த முறை தலைவராக பயணம் செய்வது எனக்கு கிடைத்த பெருமை, இந்த முறை கிண்ணத்துடன் மீண்டும் வருவோம் என்று நம்புகிறேன்.
  • ஆசியக் கிண்ணத்தில் இறுதி இரண்டு ஆட்டங்களுக்கு முன்னர் நாங்கள் இதே, அணியுடன் நன்றாக விளையாடினோம்.
 • ஆசியக் கிண்ணம் ஒரு வித்தியாசமான போட்டி, உலகக் கிண்ணம் முற்றிலும் வேறுபட்டது. எனவே அதற்காக நாங்கள் திட்டமிட்டுள்ளோம்
  • பாகிஸ்தான் அணிக்கு எது சிறப்பாகச் செயல்படுகிறதோ அதைச் செயல்படுத்துவோம்.
  • ஆசியக் கிண்ணத்துக்கான எங்களின் உத்திகளை இப்போதே வெளிப்படுத்த முடியாது. நாங்கள் இப்போது எந்த உறுதியான திட்டங்களையும் செய்யவில்லை, நாங்கள் இந்தியாவுக்குச் சென்று நிலைமைகளை மதிப்பிடும்போது அது எங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியும்.
  • அகமதாபாத்தில் விளையாடுவதை எண்ணி நான் உற்சாகத்துடன் இருக்கிறேன். எனது தனிப்பட்ட திறன்களை பற்றி நான் கவலைப்படவில்லை, நான் எதைச் செய்தாலும் அது அணிக்கான பலனைப் பெற உதவும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறினார்.