2023 ஆசிய விளையாட்டுப் போட்டி; வெள்ளிப் பதக்கம் வென்றார் நதீஷா

5 months ago
Athletics
(116 views)
aivarree.com

சீனாவின், ஹாங்சேவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டு போட்டியில் இலங்கையின் நதீஷா தில்ஹானி லேகம்கே வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலேயே அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

போட்டியில் நதீஷா, 61.57 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பெற்றார்.

இது அவரது தனிப்பட்ட சிறந்த திறன் ஆகும்.

இந்தப் போட்டியில் இந்தியாவின் அன்னு ராணி தங்கப் பதக்கத்தையும், சீனாவின் லியு ஹுய்ஹுய் வெண்கலப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.