உபுல் தரங்க தலைமையில் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு நியமனம்

7 months ago
Cricket
(198 views)
aivarree.com

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேசிய அணிகளை தெரிவு செய்வதற்காக இரண்டு வருட காலத்திற்கு புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு ஒன்றை அறிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் புதிய குழுவின் நியமனம் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தலைவராக முன்னாள் இலங்கை நட்சத்திரம் உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் பரிந்துரைத்த பெயர்களை கருத்திற்கொண்டு அமைச்சர் இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு இலங்கைக்கான ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியைத் தேர்ந்தெடுப்பதே தேர்வுக் குழுவின் முதல் உத்தியோகபூர்வ பணியாகும்.

Image