இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் சனத் ஜெயசூரிய

7 months ago
Cricket
(207 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் முழுநேர ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் அணியின் பயிற்சி, நிர்வாகம், மூலோபாய திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தவுள்ளார்.

இதற்காக அவர் மாதாந்தம் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்டிருப்பதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுதொடர்பாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் நிறைவேற்று அதிகாரிகள் இன்னும் இறுதித் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சனத் ஜெயசூரிய இதற்கு முன்னர் இலங்கை அணியின் தெரிவுக் குழு தலைவராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.