SLC இடைக்கால குழுவுக்கு ஜனாதிபதி தடை

4 months ago
Cricket
(94 views)
aivarree.com

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால குழுவுக்கு ஜனாதிபதி தடை விதித்துள்ளதாக அய்வரிக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் இடைக்கால குழுவை நியமிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்கப்படவில்லை என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இடைக்கான குழுவின் நியமனம், அதன் உறுப்பினர்கள் விபரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் SLC பதிவை இடைநிறுத்துவது, இடைக்கால குழு நியமனம் குறித்து இன்று (06) மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் தற்போது நிலவும் சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.